ஆர்.கே.நகர் என்றதும் தலையில் அடித்துக்கொண்ட
அழுக்கு சாமியார் சிதம்பரம்!
மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆண்கள், பெண்கள் கூட்டம் கூட்டமாக ஒரு மனிதரிஅ சுற்றி நின்று கையை நீட்டி ஏதோ கேட்டார்கள். அவரும் அதற்கு நின்று கொண்டே பதில் கூறுகிறார். இவர் பெயர் சிதம்பரம்; வயது 51. சொந்த ஊர் காரைக்குடி பக்கம் 12 கி.மீட்டர் தொலைவில் உள்ள கொத்தமங்கலம்.
நான் சிறுவயதில் விட்டை விட்டு வந்து பழனி மலையில் அடிவாரத்தில் தவமிருந்து சித்தர் ஞானம் பெற்றவன். நான் குறி சொன்னால் நடக்கும்.. நம்புங்கள் என்றும் தங்களால் இயன்றதை தாருங்கள் என்று கூறுகிறார். மக்களும் இவருக்கு பணம், காசு, இள நிர், பழங்கள்,சாப்பாடு என கொடுத்துகுவிக்கிறார்கள்.
பார்வதி என்ற பெண் எனக்கு குழந்தை இல்லை என்றதும், நீ பிள்ளையாரையும் என்னையும் சுற்றாதே.. புருசனை சுற்று! என்று அறிவுருத்தினார். இவரிடம் குறி கேட்பவர்கள் இந்த அழுக்கு சாமியாருக்கு இங்கையே வீடுபிடித்து தருகிறோம் தங்குங்கள் என்கிறார்கள். இவருக்கு விருப்பம் இல்லை.
பலரும் அழுக்கு சாமியார் கால்களில் விழுந்து ஆசி பெற்று வந்தனர். இதற்கிடையில் நாம் அவரிடம், RK நகர்தேர்தலை பற்றி கேட்டதற்கு, தலையில் அடித்துக் கொண்டு இங்கும் அரசியலா? என்றார். பின்னர், பிரபு என்ற பெயர் உள்ளவருக்கு ஏறுமுகம் வரும். 20ந் தேதி முதல் திமுகவிற்கு வெற்றி தான். ஏற்கனவே இங்கு(திமுக) இருந்து சென்றோர்கள் இப்போது தான் தவரை உணர்ந்து திமுக விற்கு வந்து உள்ளனர். அதனால் வெற்றி நிச்சயம் என்கிறார்.
ஜெ இறப்பை பற்றி கேட்டவுடன் நல்லோர்கள் இதயத்தில் இருப்பார் கிளம்புங்கள் என்றார்.
- ஷாகுல்