கும்பகோணம் தந்தை பெரியார் மீன் அங்காடியில் ரசாயனம் கலந்த மீன்கள் இருப்பதாக அதிகாரிகள் ஆய்வுசெய்து கூறியதை கண்டித்து, கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்திலே வியாபாரத்தில் மூன்றாவது இடமாக விளங்குகிறது கும்பகோணம் தந்தை பெரியார் மீன் அங்காடி. அங்கு கடந்த இரண்டு நாட்கள் முன்பு சென்ற மீன்வளத்துறை அதிகாரிகள் அனைத்து மீன்களையும் சோதனை செய்ததில் 100 கிலோ மீன்கள் ரசாயனம் கலந்த மீன்கள் என்றும், ரசாயனம் கலந்த மீன்களை விற்பனை செய்வதாகவும் மீன்வளத்துறை அதிகாரிகள் கூறி, ரசாயனம் கலந்த மீன்களை கையோடு எடுத்துச் சென்றனர். அந்த சம்பவம் குறித்து மீடியாக்களிலும் செய்தித்தாள்களிலும் செய்தி வந்தவுடன் கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொதுமக்கள் மீன் மார்க்கெட் மீன்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்டினர். இதனால் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதனைக் கண்டித்து தந்தை பெரியார் அனைத்து மீன் கறி கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் மீன்வளத்துறை அதிகாரிகள் தவறான தகவல் தந்ததை கண்டித்து இரு நாட்களுக்கு மீன் அங்காடி வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.