சென்னையில் 2,665 கட்டிடங்களின் கட்டுமான பணிகளை நிறுத்த சென்னை மாநகராட்சி குறிப்பாணை வெளியிட்டுள்ளது.
அனுமதியின்றி மற்றும் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் கட்டுமான பணியை நிறுத்துவதற்கான குறிப்பாணையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. விதி மீறல்களை சரி செய்யவில்லை என்றால் 2,403 கட்டுமான இடங்களுக்கு பூட்டி சீல் வைக்கப்படும் எனவும் அந்த குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமீறல்களை சரி செய்யாத 39 கட்டடங்களுக்கு ஏற்கனவே சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 15 மாநகராட்சி மண்டலங்கள் உள்ளது. இதில் வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களை கட்டுவதற்கு சென்னை மாநகராட்சியில் அனுமதி வாங்க வேண்டும். இந்த 15 மண்டலங்களிலும் சென்னை மாநகராட்சி நடத்திய ஆய்வில் அனுமதி பெறப்பட்ட 2,665 கட்டிடங்கள் வாங்கிய அனுமதியை மீறி விதிமீறல்களுடன் கட்டப்பட்ட கட்டிடங்களாக இருப்பது தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே இந்த 2,665 கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.