Skip to main content

சிறுமியை கொலை செய்து கோணிச்சாக்கில் போட்டு மறைத்த பெரியப்பா..!"

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

 

   எந்த பெற்றோரும் இத்தகைய காட்சியை பார்க்க கூடாது என்று கடவுளே ஒப்பாரி வைப்பார். ஏனெனில் ஆசை ஆசையாக வளர்த்த 4 வயது மகள் கந்தலாகி கோணி சாக்குகள் கிடந்தாள். இதை பார்த்தால் எப்படி இருக்கும்.? ஈரக்குலையே அறுந்து கீழே விழுந்து விட்டதை போல் இருந்திருக்கும் அவருக்கு. பெண் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் இனி எவனையும் நம்பக் கூடாது. விழிப்போடு இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கட்டுரை.

 

p

 

 சென்னை திருமுல்லைவாயிலை சேர்ந்தவர் ராகவன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது 4 வயது மகளை நேற்று மதியம் திடீரென காணவில்லை. பதைபதைத்துப் போன ராகவனும், மனைவியும் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் வீட்டிற்கு வந்தபோது, வீட்டு கழிவறையில் ஒரு பக்கெட்டில் சாக்கு மூட்டைக்குள் பிணமாக கண்டெடுக்கப்பட்டாள் அவரது 4 வயது மகள். யாரைக் காணவில்லை என்று ஊரெல்லாம் தேடினோமே அவ..இப்ப கந்தல் துணிபோல் சாக்கு மூட்டைக்குள் கிடக்கிறாளே என்று பெருங்குரலெடுத்து அழுத அந்த தம்பதிக்கு ஆறுதல் கூட சொல்ல முடியாமல் தவித்து நின்றனர் அக்கம்பக்கத்தினர். பின்னர் போலீஸார் வந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதில், பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

 

t

 

 சிறுமிக்கு பெரியப்பா உறவுமுறை கொண்ட மீனாட்சிசுந்தரம், தனது வீட்டிற்கு சிறுமியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அப்போது, அந்த சிறுமி அழுது கூக்குரலிட்டதால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த காலி அரிசிப்பையில் சடலத்தை போட்டு கொண்டுவந்து ராகவனின் வீட்டு கழிவறையில் வீசி சென்றிருக்கிறான் அந்த படுபாதகன். போலீஸார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் நடத்திய விசாரணையில், சிறுமியின் ஒரு தோடு(கம்மல்) மீனாட்சி சுந்தரத்தின் படுக்கையறையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, அவனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் உண்மையை ஒத்துக்கொண்டான்.

 

   முதலில் குழந்தை காணாமல் போனவுடன் பெற்றோர் தேடும் போது, இந்த படுபாதகனும் குழந்தையை காணவில்லையா? என்று பதற்றத்தோடு தேட ஆரம்பித்திருக்கிறான். போலீஸாரின் புலன் விசாரணையில் அவன் சிக்கிக் கொண்டான். முன்னாள் ராணுவ வீரரான மீனாட்சி சுந்தரம் 55 வயதை கடந்தவன். அவனிடம் என்ன பாடுபட்டிருக்கும் அந்த பிஞ்சுக் குழந்தை.! நினைத்து பார்க்கவே மனம் பதறுகிறது.

சார்ந்த செய்திகள்