சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த இல்லமான ‘வேதா நிலையம்’ இல்லத்தை தமிழக அரசு அரசுடைமையாக்கியது. மேலும், இதற்கான அரசாணையையும் அரசு வெளியிட்டது. இந்த நிலையில் ‘வேதா நிலையம்’ இல்லத்தை ஜனவரி 28- ஆம் தேதி காலை 10.30 மணியளவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெ. நினைவு இல்லம் திறப்பு பற்றி விளம்பரம் வாயிலாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. ஜெயலலிதா நினைவு இல்லம் திறக்கப்பட்டப் பிறகு பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர்.
ஜனவரி 27- ஆம் தேதி மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படும் நிலையில், அதற்கு மறுநாள் நினைவில்லம் திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.