Published on 31/10/2020 | Edited on 31/10/2020

மெட்ரோ ரயில் சேவைகள் திங்கள்கிழமை (02/11/2020) அன்று காலை 05.30 மணிக்கே தொடங்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'விடுமுறை முடிந்து திரும்ப வரும் பயணிகளின் வசதிக்காக வருகின்ற திங்கள்கிழமை (02/11/2020) அன்று மட்டும் மெட்ரோ ரயில் சேவைகள் காலை 07.00 மணிக்கு பதிலாக காலை 05.30 மணி முதல் இரவு 09.00 மணி வரை இயக்கப்படும்' என தெரிவித்துள்ளது.