Skip to main content

சென்னை உயர்நீதிமன்றம் 7- ஆம் தேதி முதல் செயல்படும்! -நிர்வாகக்குழு கூட்டத்தின் அறிவிப்பால் வழக்கறிஞர்கள் மகிழ்ச்சி!

Published on 30/08/2020 | Edited on 30/08/2020

 

chennai high court again regular working sep 7th

சென்னை உயர்நீதிமன்றம் வருகிற செப்டம்பர் 7- ஆம் தேதி முதல் செயல்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற நிர்வாகக்குழு கூட்டம் அறிவித்துள்ளது. கடந்த 5 மாதங்களாக சென்னை உயர்நீதிமன்றம் திறக்கப்படாமல் இருந்தது. நீதிமன்றத்தை திறக்கக்கோரி, பல்வேறு சங்கத் தலைவர்கள் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்கள். இந்தக் கோரிக்கையை எல்லாம் பரிசீலிக்க ஏழு நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது  இந்தக் குழு கூடி செப்டம்பர் 7- ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணை நடத்தலாம் என்று முடிவு செய்து அறிவித்துள்ளது.

 

தலைமை நீதிபதி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் உட்பட 6 டிவிஷன் பெஞ்சுகளும், உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 7- ஆம் தேதி முதல் செயல்படலாம். இதில் வழக்கறிஞர்கள் நேரடியாக வாதாட அனுமதி வழங்கப்படுகிறது. அதன்பிறகு, படிப்படியாக இதில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று இந்தக் குழு அறிவித்துள்ளது.  இது வழக்கறிஞர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்