Published on 21/06/2021 | Edited on 21/06/2021

ஆன்லைன் விளையாட்டு யூடியூப் சேனலில் ஆபாசமாகப் பேசியதாக 'பப்ஜி' மதன் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல், மதனின் மனைவியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சுமார் 8 லட்சம் சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட 'பப்ஜி' மதனின் இரண்டு யூ டியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. யூடியூப் சேனலின் அட்மினிடம் பாஸ்வேர்டு பெற்று இரண்டு யூ டியூப் சேனல்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் காவல்துறையினர் முடக்கினர்.
'பப்ஜி' கேம் விளையாடுவதை நிறுத்திவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.