Skip to main content

சென்னையில் பெருகிவரும் ரவுடிகள்..!

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

 

 இன்று மதியம் (அக்.10) ஒரு மணியளவில் எழும்பூர் கோர்ட்டிலிருந்து திருவல்லிக்கேணியை நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார் பெண் வழக்கறிஞர் மலர்.

அப்போது சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெரு அருகே வந்து கொண்டிருந்தபோது ஆட்டோவை வழிமறித்த ஆறு பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில் இருந்த மலர் மற்றும் இருவர் மீது சரமாரியாக வெட்ட உடனோ பரபரப்பான மக்கள் நடமாட்டமான பகுதி என்பதால் மக்கள் தெரித்து ஓட... டமால் என்று பயங்கர சத்ததுடன் பாம் வெடிக்க... உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இங்கு பாம் வெடித்தது என போலீசார் விரைந்தனர்.

அதேவேளையில் மோடி மற்றும் சீன அதிபர் ஜி.ஜின்பிங் நாளை வருகைக்கு ஒத்திகையில் இருந்த காவல்துறை கதிகலங்கியது. பின்னர் வழக்கறிஞர் மலரை விசாரித்தில் பிரபல ரவுடியான ஐஸ் அவுஸ் பகுதியை சேர்ந்த தோட்டம் சேகரின் மூன்றாவது மனைவியான மலர் என்பதும், உடன் வந்தவன் ரவுடி அழகுராஜா, மணிகண்டன் விஜயகுமார் என்பதும் தெரிய வந்தது. 

கடந்த 2018 அக்டோபர் 22 ஆம் தேதி ராயப்பேட்டை பெசன்ட் சாலையில் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் அழகுராஜாவுக்கு தொடர்புள்ளது என்றும் அதற்கு பழிவாங்கவே அப்பாஸ்சின் மைத்துனன் ஷேக்கின் ஆட்களா என்று விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் மைலாப்பூரை சேர்ந்த பிரபல ரவுடி சிவக்குமாருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸ்சார் விசாரித்து வருகின்றனர்.

 

chennai city rowdies increase

 

1990 களில் ஐஸ்அவுஸ் பகுதியை சேர்ந்த தோட்டம் சேகரை கொலை செய்த வழக்கில் வீரமணியுடன் மைலாப்பூர் சிவக்குமாருக்கும் தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. அழகுராஜாவை கொலை செய்ய அவனை கண்காணித்து வந்த ரவுடிகளையும் உளவுதுறை முன்னரே உஷார் படுத்தியது. அதன்பெயரில் மைலாப்பூர் துணை ஆணையர் ஜெயலட்சுமி சம்பவத்துக்கு முன் தினம் தான் சென்னையில் சுற்றவேண்டாம் உயிருக்கு ஆபத்துள்ளது என எச்சரித்து அனுப்பியுள்ளார். இதனால் தயாராக இருந்த அழகுராஜா தான் வெட்ட வரும்போது  வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வீசி தப்பியுள்ளான். மலர் மற்றும் அழகுராஜா சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். உடன் வந்த மணிகண்டன், விஜயகுமார் போலீஸ் விசாரணையில் உள்ளனர். தப்பியோடிய அரவிந்த் மற்றும் அப்புவை தேடிவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்