சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (02/10/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய ஏழு டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் சேலம், நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் நாளை (03/10/2021) கனமழையும், அக்டோபர் 4 முதல் அக்டோபர் 6- ஆம் தேதி வரை மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக விழுப்புரம், ஊத்தங்கரையில் தலா 8 செ.மீ., மழை பதிவானது. மண்டபம், ராமேஸ்வரத்தில் தலா 7 செ.மீ., மோகனூர், முசிறி, கிருஷ்ணராயபுரத்தில் தலா 6 செ.மீ. மழை பதிவானது." இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.