செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரி சோதனை!
முன்னாள் அமைச்சரும், தினகரன் ஆதரவாளருமான எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி ஆதரவாளர்களின் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரூரில் செந்தில்பாலாஜி ஆதரவாளர்களின் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. கரூரில் 8 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை நடைபெறும் இடங்கள் அனைத்தும் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே செந்தில்பாலாஜியின் மீது அரசு போக்குவரத்துத்துறையில் வேலைவாங்கித்தருவதாகக்கூறி ரூ.95 லட்சம் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு நெருங்கிய வட்டங்களின் மீது வருமான வரிசோதனையை ஏவிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- ஜே.டி.ஆர்