Skip to main content

சுதந்திர தினம் கொண்டாட்டத்தில் மரக்கன்றுகள் வழக்கிய முன்னால் மாணவர்கள்

Published on 15/08/2017 | Edited on 15/08/2017

 சுதந்திர தினம் கொண்டாட்டத்தில் 
மரக்கன்றுகள் வழக்கிய முன்னால் மாணவர்கள்

கீரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்களில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. மேலும் பள்ளிகளில் பேச்சு, கட்டுரை, கவிதை, மாறுவேடப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசகள் வழங்கப்பட்டது. 
செரியலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முன்னால் மாணவர்கள், காந்தி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டதுடன் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. 
அதே போல காசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் தேசியக் கொடியுடன் இந்தியா வரைப்படமாக நின்றனர்.
அரசு அலுவலகங்களில்.. 
அதே போல  கீரமங்கலம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தேசிய கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கினார். அதே போல கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் அலவலகம் முன்பு முதல் முறையாக வருவாய் ஆய்வாளர் ரெங்கராஜன் தேசிய கொடி ஏற்றினார். விழாவில் சுற்றுவட்டார கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
கீரமங்கலத்தை சுற்றியுள்ள செரியலூர், வேம்பங்குடி மேற்கு, கிழக்கு, மேற்பனைக்காடு, நெய்வத்தளி, பனங்குளம், குளமங்கலம் வடக்கு, தெற்கு, கொத்தமங்கலம், சேந்தன்குடி, நகரம், மற்றும் பல கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடந்தது. பல ஊராட்சிகளில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

- பகத்சிங்

சார்ந்த செய்திகள்