உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பல்வேறு காலதாமதம் செய்து வரைவு திட்டத்தை தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு திட்ட அறிக்கையை பெற்று உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துக்களை கேட்டறிய வேண்டும். அதில் விவாதிக்கப்படும் கருத்துகளை கொண்டு வரைவு திட்டத்தை ஏற்கலமா? என முடிவு செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறினார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசு பல்வேறு தவணைகளை உச்சநீதிமன்றத்தில் வாங்கியது. இறுதியாக இன்று (திங்கள்) வரைவு திட்டத்தை தாக்கல் செய்துள்ளது. ஏற்கெனவே பிப் 16-ந் தேதி வரைவு திட்டத்தை தாக்கல் செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு மத்திய அரசு கர்நாடகத்தில் தேல்தல் நடைபெறவுள்ளதால் பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்திக்க முடியாத நிலையில் மத்திய அமைச்சரவையை கூட்ட முடியவில்லை. பிரதமரின் ஒப்பதலையும் பெறவில்லையென்றெல்லாம் காலம் தாழ்த்தி வந்தது மத்திய அரசு. தற்போது கர்நாடக தேர்தல் முடிந்த நிலையில் திட்ட அறிக்கையை பிரதமர் மற்றும் அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் தாக்கல் செய்ப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தை கர்நாடக தேர்தலை காட்டி மத்திய மோடி அரசு ஏமாற்றியுள்ளது என்று இதன் மூலம் நிறுபிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காகவே மத்திய அரசு திட்டமிட்டு இந்த காலதாமதத்தை ஏற்படுத்தி இருப்பதை ஏற்கமுடியாது. எனவே தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை நாளையே (செவ்வாய்) கூட்ட வேண்டும். மத்திய அரசு சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு வரைவு திட்ட நகலை வழங்க வேண்டும். அந்த வரைவு திட்டத்தின் நகல்களை தமிழக அரசு அனைத்துக் கட்சிகளுக்கும் வழங்கி, அனைத்து கட்சிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்து அதன்படி வரைவு திட்ட அறிக்கையை ஏற்பதா என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.
தாக்கல் செய்யப்பட்ட வரைவு அறிக்கையில் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின்படி அனைத்து அம்சங்களும் நிறைந்த அதிகாரம் பொருந்திய வரைவு திட்டமாக இது இருக்க வேண்டும். இதில் கர்நாடக, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள நீர்நிலைகள், அனைகளை நிர்வகிக்கும் திறன் பெற்றதாக இந்த வாரியம் அமைய வேண்டும். அப்படி இல்லையென்றால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைப்பது சிரமம் தான். கடந்த பிப் 16 மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்து இருந்தால் இன்னேறம் வழக்கு ஒரு முடிவுக்கு வந்து இருக்கும். தற்போது வரும் 16-ந்தேதிக்கு மேல் நீதிமன்ற விடுமுறை வருகிறது. இறுதி நாளில் தாக்கல் செய்தால் வழக்கை இழுத்தடிக்கும் அநீதியை மத்திய அரசு செய்கிறது என்றே தோன்றுகிறது என கூறினார். இவருடன் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கற்பனைச்செல்வம், வாஞ்சிநாதன்,பாரதிமோகன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.