கோவை ஆர்எஸ்.புரம், அன்னபூர்ணா பின்புறம் உள்ள கன்னுசாமி சாலையில் உள்ள zucca PIZZA கடையில் பூனை 2 நாட்களாக இறந்து கிடந்திருக்கிறது. பக்கத்து கடைக்காரர்கள் பீட்ஸா கடைக்காரரிடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளாமல், கதவை சாத்தி வைத்துக்கொண்டு, பீட்ஸா விற்பனையை நடத்தி வந்தனர்.
அருண் என்பவருக்கு சொந்தமான இந்த பீட்ஸா கடை கோவை மட்டுமின்றி பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், இந்த பீட்ஸா கடைக்கு பின்புறத்தில், அடுக்கி வைத்திருந்த உணவு பொருட்களை சாப்பிட்ட பூனையும், இரண்டு எலிகளும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சாப்பிட்டு இறந்து போய் விட்டது.
இதை பீட்ஸா கடையினர் கண்டுகொள்ளாமல், பின்பக்க கதவை சாத்திவிட்டு வியாபாரத்தை பார்த்துள்ளனர். இறந்த பூனையின் உடலில் துர்நாற்றம் வீசி, புழுக்கள் வரத்துவங்கியது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடத்தில் பக்கத்து கடைக்காரர்கள் புகார் அளித்தனர். மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்துபோன பூனையை அப்புறப்படுத்தியும், பீட்ஸா கடையை பூட்டி சென்றனர். இந்த பீட்ஸாக்களை விரும்பி சாப்பிடும் மனிதர்களின் உடல் நலம் என்னாகும்? மிக முக்கியமாக குழந்தைகள் உடல் என கேள்வி எழுப்புகிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.
இதுகுறித்து பீட்ஸா கடையின் உரிமையாளர் அருண் கூறுகையில், "சார்... நீங்கள் தான் என் கருத்தை கேட்குறீர்கள். அந்த பூனை இறந்து கிடந்தது என் கடைக்குள் இல்லை. அது நிறைய கடைகள் இருக்கும் பொது வழியில் கிடந்தது. ஆனால் என் கடைக்குள் இருந்ததாக மாநகராட்சி அதிகாரிகள் தவறாக நினைத்து கடைக்கு சீல் வைத்து விட்டனர். சீல் உடைக்கத்தான் போராடிக் கொண்டிருக்கிறேன்" என்றார்.