கோவில் வாசலில் கஞ்சா விற்ற போலி சாமியாரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னையில் கடந்த சில வாரங்களாக பொது இடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்ததை அடுத்து இதுதொடர்பாக தனிப்படைகள் அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. இதனை அடுத்து 10க்கும் மேற்பட்ட கஞ்சா விற்பனை செய்பவர்களை காவல்துறையினர் சில நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து கைது செய்து வந்தார்கள்.
இந்நிலையில் சென்னையில் மிக முக்கியமான கோவில் வாசலில் சாமியார் ஒருவர் மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கு கஞ்சா விற்பனை செய்வதை கண்டுபிடித்த காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 7 கிலோ கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். மேலும் அவருக்கு கஞ்சா சப்ளை செய்ததாக இரண்டு இளைஞர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சாமியார் ஒருவர் கஞ்சா கேஸில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.