தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற உள்ள தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது. 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 12,838 பதவியிடங்களுக்கு வரும் பிப்ரவரி 19- ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறும் நகர்ப்புற தேர்தலில் 57,778 பேர் போட்டியிடுகின்றன. பதிவாகும் வாக்குகள் வரும் பிப்ரவரி 22- ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 218 உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை செய்ய வந்துள்ள வெளியூர் நபர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக தமிழகம் முழுவதும் வரும் பிப்ரவரி 19- ஆம் தேதி அன்று பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.