Published on 01/12/2021 | Edited on 01/12/2021
கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இருந்து நீண்ட நாட்களாக கேரளாவுக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கப்படாமல் இருந்தது. அண்டை மாநிலங்களான தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகாவுக்கு பேருந்து போக்குவரத்துக்கு சில மாதங்களுக்கு முன்பே தமிழக அரசு அனுமதி வழங்கிய நிலையில், கரோனா தொற்று கட்டுக்குள் வராததால் கேரளாவுக்கு மட்டும் கடந்த 23 மாதங்களாகப் பேருந்து போக்குவரத்து தொடங்கப்படாமல் இருந்தது.
இதனால் கேரளாவுக்குச் செல்ல விரும்புவோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்நிலையில், தற்போது கரோனா பாதிப்பு கேரளாவில் குறைந்துள்ளதால் இன்று காலை முதல் பேருந்து போக்குவரத்து துவங்கியுள்ளது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கும், கோவையில் இருந்து பாலக்காட்டுக்கும் பேருந்து போக்குவரத்து துவங்கியுள்ளது.