பல்லாவரம் அருகே பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து
சென்னை பல்லாவரம் அருகே பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அரசு பஸ் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து காரணமாக ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சேதங்கள் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பணிக்கும் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். போலீஸார் போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர்.