பாதயாத்திரை சென்றவர்கள் மீது பஸ் மோதிய விபத்து - 3 பக்தர்கள் பலி
திருச்சி எடமலைப்பட்டிபு தூர் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). இவர் ஒவ்வொரு ஆண்டும் அப்பகுதியை சேர்ந்த உறவினர்களுடன் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு சென்று வருவது வழக்கம். இந்த ஆண்டும் செல்வராஜ் தலைமையில் நேற்று முன் நாள் 23 பேர் பாதயாத்திரையாக எடமலைப்பட்டிபுதூரில் இருந்து மன்னார்புரம் ரவுண்டானா மேம்பாலம் வழியாக டி.வி. எஸ். டோல்கேட் ஜிகார்னர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர்.
பாதையாத்திரை செல்லும் பக்தர்கள் தேவைக்காக ஒரு தட்டுவண்டியில் பொருட்களையும் எடுத்துச்சென்றனர். இரவு 10 மணிக்கு ஜி கார்னர் அருகே 4 வழிச்சாலை மேம்பாலத்தில் நடுப்பகுதியில் சென்றபோது மழை பெய்தது. இதனால் அவர்கள் தட்டுவண்டியில் இருந்த பொருட்களை தார்ப்பாயால் மூடினர். மற்ற பக்தர்கள் பாலத்தின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது திருச்சியில் இருந்து பட்டுக்கோட்டைக்கு சென்ற தனியார் பஸ் மேம்பாலத்தில் நின்ற தட்டு ரிக்ஷாவை கவனிக்காமல் அதன் மீது மோதியது. மேலும், பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது. பஸ் மோதிய வேகத்தில் மேம்பாலத்தில் இருந்து பக்தர்கள் அனைவரும் 20 அடி உயரத்தில் இருந்து சர்வீஸ் சாலை பகுதியில் தூக்கி வீசப்பட்டனர். சிலர் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து அறிந்ததும். எடமலைப்பட்டி புதூர் போலீசார் மற்றும் திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திருச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் சிகிச்சை பெற்று வந்த பாபு நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதை தொடர்ந்து பலியான பக்தர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்தது. மழை பெய்ததால் மேம்பாலத்தில் பஸ் சென்ற போது கண்ணாடியில் நீர் துளிகள் பட்டு சரியாக பாதை தெரியாமல் இருந்துள்ளது. இதனால் பாலத்தின் ஓரத்தில் பக்தர்கள் நிற்பதை கவனிக்காததால் பஸ் மோதியதாக கூறப்படுகிறது.