திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே செயின்ட் ஜோசப் ஆதரவற்றோர் கருணை இல்லத்தில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் காவல்துறையினர் ஆய்வு நடத்தினர். ஒரு மாதத்தில் மட்டும் 24 பேர் இறந்துள்ளனர். தற்போது இறந்தவர்களின் இறப்பு சான்றிதழ் மற்றும் அவர்கள் எத்தனை நாட்களாக தங்கி உள்ளனர் என்று விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே உள்ள கருணை இல்லத்தில் தனிக்குழுவினர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தனித்தனியாக முதியோர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வில் விருப்பப்பட்டோர்களை உடனடியாக வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. மேலும் முதியோர்களை மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். ஆய்வு முழுமையாக முடிந்த பின்பு தான் நடவடிக்கை பற்றி தெரியும் என்று கூறுகின்றனர். அதேபோல் இங்கு சுமார் 300க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மாவட்ட சமூக நல அதிகாரி சாந்தி மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி இங்கு ஆய்வில் உள்ளனர். இல்லம் சுத்தமின்றி இருக்கிறது பராமரிப்பு சரியில்லை என்று ஆய்வு. பிணம் புதைக்கப்பட்ட சுவரை உடைத்து பிணம் உள்ளதா என ஆய்வு