
திருச்சி பாலக்கரை கீழகிருஷ்ணன்கோவில் தெருவில் பாலக்காட்டு பகவதி அம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று பக்தர்களின் தரிசனத்திற்கு பிறகு கோவில் பூட்டப்பட்டது. இந்த நிலையில், மர்ம ஆசாமிகள் யாரோ கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.
பிறகு கோவிலுக்கு வந்து மதுரைவீரன் என்ற பக்தர் பார்த்தபொழுது கோவிலின் பூட்டு மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பாலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த திருட்டு சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.