Skip to main content

பூங்காவில் நுழைந்த கருஞ்சிறுத்தை; பொதுமக்கள் அச்சம்

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
A black panther entered the park; Exciting CCTV footage

நீலகிரி மாவட்டத்தில் பூங்கா ஒன்றுக்குள் கருஞ்சிறுத்தைப் புகுந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி மாவட்டம் வனப்பகுதிகளை ஒட்டிய கிராமங்களில் அடிக்கடி வனவிலங்குகள் ஊருக்குள் புகும் சம்பவங்கள் தொடர் கதையாகி வரும் நிலையில் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் நுழைவுவாயில் பகுதியில் இரவு நேரத்தில் கருஞ்சிறுத்தை ஒன்று உலாவியது தெரிய வந்தது. இந்தக் காட்சிகள் பூங்கா வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில்  பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் அந்தப் பகுதியில் உலாவி வரும் கருஞ்சிறுத்தையைப் பிடித்து வனப்பகுதிக்குள் விட அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கருஞ்சிறுத்தை உலாவுவது தொடர்பான செய்திகள் அந்தப்பகுதி மக்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தாயை பிரிந்த குட்டி யானை; சோக செய்தியை வெளியிட்ட வனத்துறை

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Baby elephant dies after being separated from its mother

கோவையில் தாய் யானையை பிரிந்து தவித்து வந்த குட்டி யானை உயிரிழந்து விட்டதாக வனத்துறை அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் 30.05.2024 அன்று மயங்கிய நிலையில் இருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்றை வனத்துறையினர் கண்டறிந்தனர். உடன் 4 மாத குட்டி யானையும் இருந்தது. உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு வனத்துறையினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். அதே சமயம் தாயை எழுப்ப குட்டி யானையும் பாசப் போராட்டம் நடத்தியது. இதற்கிடையே தாயிடம் பால் குடிக்க முயன்ற குட்டி யானைக்கு லாக்டோஜன் மற்றும் இளநீர் போன்ற நீர் ஆகாரங்களை வனத்துறையினர் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து கிரேன் மூலம் யானை தூக்கி நிறுத்தப்பட்ட நிலையில் நோய் எதிர்ப்பு மருந்துகள் அளிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. தொடர் சிகிச்சையின் பலனாக கிரேன் உதவியுடன் எழுந்து நிற்க வைக்கப்பட்டது. தொடர்ந்து நான்கு நாட்கள் கிரேன் மூலம் தூக்கி நிறுத்தி வைக்கப்பட்ட தாய் யானைக்கு சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வந்தது. நாளுக்கு நாள் கொடுக்கப்பட்ட சிகிச்சை மூலம்  உடல்நலம் தேறிய நிலையில் கிரேனில் இருந்து வெளியேற்றப்பட்ட தாய் யானை வனப்பகுதிக்குள் தானாக சென்றது. ஆனால் குட்டி யானை தாய் எதிர்கொள்ளவில்லை. வனத்துறை முயற்சித்தும் தாய் யானையிடம் குட்டி யானையை சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து கடந்த ஒன்பதாம் தேதி மருதமலையில் இருந்து  நீலகிரி தெப்பக்காட்டுக்கு கொண்டுவரப்பட்ட குட்டி யானை, யானைகள் வளர்ப்பு முகாமில் விடப்பட்டிருந்தது. இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்ட குட்டி யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது குட்டி யானை உயிரிழந்ததாக வனத்துறை தெரிவித்துள்ளது.

Next Story

வனப்பகுதி ஓரத்தில் கிடந்த சாக்கு மூட்டை; அதிர்ந்த போலீசார்

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Human bones in a sack lying on the edge of the forest; Police investigation

தாளவாடி அருகே வனப்பகுதி ஓரத்தில் சாக்கு மூட்டையில் மனித எலும்புகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தலைமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட தொட்டாப்புரம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஒரு சாக்கு மூட்டை கிடந்துள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதுபற்றி உடனடியாக தாளவாடி காவல்துறைக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த சாக்கு மூட்டையை பிரித்துப் பார்த்ததில் உள்ளே மனித எலும்புகள் இருந்தது தெரிய வந்தது.

மனித எலும்பைக் கைப்பற்றிய காவல்துறையினர் ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த மனித எலும்புகள் யாருடையது? யாராவது கொலை செய்யப்பட்டு சாக்குமூட்டையில் கட்டி வனப்பகுதியில் வீசப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் தாளவாடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தசம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.