Skip to main content

தி.க கூட்டத்தில் பாஜக கல்வீச்சு; நாற்காலி உடைப்பு, சாலைமறியல் - கடையடைப்பு பதற்றம்

Published on 16/04/2018 | Edited on 16/04/2018
thiruma in

 

 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கட்டுமாவடியில் திராவிட கழக பொதுக்கூட்டம்  மாலை தொடங்கி நடைபெற்றது . இந்த பொதுக்கூட்டத்திற்கு மண்டலத்தலைவர் இராவணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திராவிடர் கழகத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது உறுப்பினர்கள் பேசுகையில் சாமி,கடவுள் கிடையாது என பேசிக் கொண்டிருந்த போது  கட்டுமாவடி, கணேசபுரம், செம்பியன்மாஹாதேவிபட்டினம், உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த இந்து முன்னணி .பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் பொதுக்கூட்ட வளாகத்தில் ஒன்று கூடி இந்து மதத்தை இழிவாக பேசியதாக கூறி அங்கு போடப்பட்டிருந்த நாற்காலிகளை உடைத்தனர்.

 

 கூட்டத்தில் கற்களையும் வீசியுள்ளனர்.  அதனால் திராவிட கழகத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியல் செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக அப்பகுதியைச் சேர்ந்த பலரும் மறியலில் கலந்து கொண்டனர்.

 

அப்போது கூட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினார்கள். உடனே அங்கு வந்த கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு காமராஜ் மணமேல்குடி இன்ஸ்பெக்டர் பாலாஜி சம்மந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் இந்த திடீர் கலவரத்தால் கட்டுமாவடி கடைவீதியில் பதற்றம் ஏற்பட்டு அணைத்து கடைகளும் அடைக்கப்பட்டு போலீஸ் குவிக்கப்பட்டது .
   ஆனால் திராவிடர் கழகத்திற்கு ஆதரவாக நின்றவர்களின்  அப்பகுதியை சேர்ந்த
 பல வீடுகளிலும் இரவிலும் கல்வீச்சு நடப்பதாக கூறப்படுகிறது.


    சனிக்கிழமை பொன்னமராவதியில் எச்.ராஜா வந்த போது கருப்பு கொடி காட்டியதால் திருமாவளவன் படத்தை எரிக்க பாஜக வினர் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த சம்பவமாக கட்டுமாவடி பற்றிக் கொண்டது.
  

சார்ந்த செய்திகள்