Skip to main content

பாஜகவுடன் ஸ்டாலின் பேசவில்லை;மோடியுடன் பேசியதாக தமிழிசை உளறுகிறார் - பொன்முடி

Published on 14/05/2019 | Edited on 14/05/2019

மக்களவை தேர்தல் முடிவுகள் வரும் 23ம் தேதி வெளிவரவிருக்கும் நிலையில், ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்த திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று 3வது அணி அமைக்கும் முயற்சியில் இருக்கும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   3வது அணிக்கு வாய்ப்பு இல்லை என்று ஸ்டாலின் மறுத்தாலும் 3வது அணிக்கான முயற்சியில் ஸ்டாலின் உள்ளார் என்று பேசப்படுகிறது.

 

p

 

இந்நிலையில் இன்று,  ‘’திமுக தலைவர் ஸ்டாலின் நிறம் மாறிக்கொண்டிருக்கிறார். பாஜகவுடன் ஸ்டாலின் பேசுகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார்  கூறியது உண்மைதான்.   பாஜக வெற்றி பெறும் என்று தெரிந்து பாஜகவுடன் ஸ்டாலின் பேசி வருகிறார்.  மோடியுடனும் தொடர்பில் இருக்கிறார்’’ என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.


இது குறித்து திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி,   ‘’பாஜகவுடன் திமுக பேசவில்லை.   திமுக நிறம்மாறுவதாக தமிழிசை உளறுகிறார்.  பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திதான் என்பதில் தலைவர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார்’’ என்று மறுத்துள்ளார்.   

சார்ந்த செய்திகள்