Skip to main content

ஓ.பி.ஸ் பாஜகவில் இணைய போவதாக வெளியான தகவல் வெறும் யூகம் மட்டுமே: தமிழிசை

Published on 02/08/2017 | Edited on 02/08/2017
ஓ.பி.ஸ் பாஜகவில் இணைய போவதாக வெளியான தகவல் வெறும் யூகம் மட்டுமே: தமிழிசை



முன்னாள் முதல்வர் ஓபிஸ் பாஜகவில் இணைய போவதாக வெளியான தகவல் வெறும் யூகம் மட்டுமே என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திப்பின் போது கூறியதாவது,

கட்சியை பலப்படுத்தும் விதமாக 3 நாள் சுற்றுப் பயணமாக, அமித்ஷா வரும் 22ம் தேதி தமிழகம் வர உள்ளதாக குறிப்பிட்டார். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தொடர்ந்து தவறான தகவல் தமிழகத்தில் பரப்பப்படுகிறது.

உணவு பாதுகாப்பு திட்டத்தால் அரிசி கிடைக்காது என்ற தகவல் தவறானது. முன்னாள் முதல்வர் ஓபிஸ் பாஜகவில் இணைய போவதாக வெளியான தகவல் வெறும் யூகம் மட்டுமே என்று அவர் தெரிவித்தார்.

 படங்கள் - செண்பகபாண்டியன்

சார்ந்த செய்திகள்