கடந்த வருடம் இதே நாளில் சென்னை மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் பெரிய பாண்டியன் ராஜஸ்தானில் கொள்ளையரைப் பிடிக்க முற்பட்ட போது எதிர்பாராத வகையில் பாய்ந்த குண்டு இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனின் உயிரைக் குடித்தது.
அவரின் முதலாண்டு நினைவு தினத்தின் போது சொந்த கிராமத்தினர் மலரஞ்சலி செலுத்தினர்.
மதுரவாயால் பகுதியில் நடந்த நகை கொள்ளையில் கொள்ளையன் நாதுராமைப் பிடிப்பதற்காக ஆய்வாளர்களான பெரிய பாண்டியன், மற்றும் முனிசேகர் தலைமையில் போலீசார் ராஜஸ்தான் சென்றனர். அங்குள்ள செங்கல் சூளையில் பதுங்கியிருந்த நாதுராமின் கும்பலைப் பெரிய பாண்டியன் வளைத்த போது. அவர்களை மடக்க இன்ஸ்பெக்டர் முனிசேகர் சுட்டதில் தவறுதாலாக குண்டு பெரிய பாண்டியனின் மார்பில் பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே மரண மடைந்தார். அவரின் 2ம் ஆண்டு நினைவு அஞ்சலி அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டத்தின் சாலைப்புதூரில் அனுஷ்டிக்கப்பட்டது. நெல்லை மாவட்ட காவல்துறையினரும் அவரவர் காவல் லிமிட்டில் பெரிய பாண்டியனின் படத்தை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
சொந்த ஊரில் கிராம மக்கள் திரண்டு வந்து அவரது சமாதியில் கண்ணீரஞ்சலி செலுத்தினர். அவரது நினைவாக அன்னதானமும் வழங்கப்பட்டது. சென்னையில் அண்ணன் பணிபுரிந்த மதுரவாயல் மற்றும் அங்குள்ள காவல் நிலையங்களில் உடன் பணியாற்றிய சுமார் 15 போலீசார் சென்னையிலிருந்து வந்திருந்தார்கள். அண்ணன் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்கள். அது எங்களுக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது ஆனால் அரசு எங்களுக்கும் எங்கள் கிராமத்திற்கும் கொடுத்த வாக்குறுதியை ஒராண்டாகியும் நிறை வேற்றவில்லை. என்றார் பெரிய பாண்டியனின் சகோதரர் ஜோசப் வருத்தமான குரலில்.