
குறிப்பிட்ட சமூகத்தினரை அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் அண்மையில் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று அவருக்கு நீதிமன்றம்நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியிருந்தது.
இந்நிலையில் தற்போது அவர் சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''என்னை குடும்பம் போல் பாதுகாத்த என்னுடைய நண்பர்களுக்கு நன்றி. என்னுடைய வழக்கறிஞர்களுக்கு நன்றி. அரசியல் வித்தியாசம் பாராமல் எனக்காக ஆதரவு தந்த அனைத்து தலைவர்களுக்கும் நன்றி. என்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி. ஆந்திரா, தெலுங்கானா மக்களுக்கு மிகப்பெரிய நன்றி. புழல் சிறையில் என்னை நன்றாக நடத்திய அனைவருக்கும் நன்றி. எல்லாவற்றுக்கும் மேலாக சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி'' என்றார்.