பீர் பாட்டில்கள் 12, ஒயின் பாட்டில் 12 வகைகளையும் வீட்டில் வைத்துக் கொள்ளலாம் -தமிழக அரசு
வீடுகளில் 12 மதுபான பாட்டில்களை இருப்பு வைத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதித்துள்ளது.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரகம் தமிழக அரசிதழில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, உள்நாட்டு மதுபான வகைகள் தலா 750 மில்லி லிட்டர் அளவு கொண்ட 6 பாட்டில்களிலும், வெளிநாட்டு மதுபான வகைகள் தலா 750 மில்லி லிட்டர் அளவு கொண்ட 6 பாட்டில்களிலும் மக்கள் தங்கள் வீடுகளில் இருப்பு வைத்துக் கொள்ளலாம்.
மேலும், 12 பாட்டில்கள் பீர், 12 பாட்டில் ஒயின் வகைகளையும் வீட்டில் வைத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதித்திருப்பதாக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.