Skip to main content

 தேர்தலுக்கு தடை! அப்செட் ஆன அமைச்சர் தங்கமணி!

Published on 13/10/2018 | Edited on 13/10/2018
mini

 

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது.   சுமார் 2 ஆயிரம் பேருக்கு மேல் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.   இந்த நிலையில் இந்த ஆலைக்கு தேர்தல் நடத்த அறிவிப்பு செய்து கடந்த 9ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, 11ம் தேதி தேர்தல் என அறிவிக்கப்பட்டது.  நாமக்கல் மாவட்டத்திலேயே அதிக விவசாயிகளை கொண்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை இது.  இதன் தலைவர் மற்றும் நிர்வாக பொறுப்பை அதிமுகவே கைப்பற்ற வேண்டுமென அமைச்சர் தங்கமணி நேரடி கண்காணிப்பில் இருந்தார்.    அதன் காரணமாகவே, திடீரென வாக்காளர் பட்டியல் வெளி்யிடப்பட்டு தேர்தலும் அறிவிக்கப்பட்டது.

 

   இந்நிலையில் திமுகவை சேர்ந்த கைலாலசம் என்பவர் உயர்நீதிமன்றத்திற்கு சென்று மோசடியாக தேர்தல் நடத்த அதிமுகவினர் முயற்சிக்கிறார்கள் என மனுச்செய்து தடை ஆணை பெற்றுவிட்டார்.   இது பற்றி முன்னாள் எம்.எல்.ஏவும் திமுகவைச்சேர்ந்தவருமான சரஸ்வதி கூறுகையில்,  கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தலில் போலி உறுப்பினர்களை வைத்து நிர்வாகத்தை கைப்பற்றலாமென எவ்வளவோ முயற்சி செய்தார் அமைச்சர் தங்கமணி.    ஆனால் தங்கமணியின் கருத்து இங்கு வேகவில்லை என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்