கரோனாவை விரட்ட முழு ஊரடங்கு அவசியம் என்று அரசாங்கம் சொல்லி விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதுடன் அதிதியாவசியப் பொருட்கள் வாங்கும் இடங்களிலும் கூட்டம் கூடக் கூடாது சமூக இடைவெளி அவசியம் வேண்டும் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
வங்கிக் கடன் தவணை மூன்று மாதங்களுக்குப் பிறகு செலுத்தவும் சலுகை வழங்கப்படும் என்று அரசு உத்தரவுகளில் சொன்னாலும் அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளும் கடன் தவணை தொகையைப் பிடித்தம் செய்து கொண்டுவிட்டனர் . அரசு உத்தரவு ஏனோ வங்கிகளுக்கு எட்டவில்லை.
இந்த நிலையில் தான் வங்கிகளில் விவசாய நகைக்கடன் வைத்துள்ளவர்களின் தேதிகள் முடிவடையும் நிலையில் உடனடியாக வங்கிக்கு வந்து வட்டியைக் கட்டி மறுபடியும் கடன் தேதியைப் புதுப்பித்துக் கொள்ள வங்கிகள் வாடிக்கையாளர்களை அழைத்துக் கொண்டே இருந்தனர். அதனால் நேற்று (13/04/2020) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளி காற்றில் பறந்துவிட்டது.
இப்படி தினசரி வங்கிகள் கூட்டம் கூட்டினால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை இல்லாத கரோனாவைக் கூட்டி வந்துவிடுவார்களோ என்ற அச்சம் மக்களிடம் உள்ளது.