Skip to main content

97-வது நாளில் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட பாலாஜி?

Published on 22/09/2018 | Edited on 22/09/2018
bala

 

97-வது நாள்.   விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் -2வில் இன்று சனிக்கிழமை 97வது நாள்.  பிக்பாஸ்-1 100 நாள்தான்.  ஆனால், பிக்பாஸ் -2வில் 5 நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.   இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கிறது என்று சென்ற வாரமே கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.  அதாவது  சனிக்கிழமை ஒருவரும்,  ஞாயிற்றுக்கிழமை ஒருவரும் வெளியேற்றப்படுவார்கள்.  வழக்கமாக ஞாயிறு மட்டும் எவிக்‌ஷன் இருக்கும்.  

 
பிக் பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேற்றப்படும்  போட்டியாளர் பாலாஜி என்று தெரியவருகிறது.  

எந்த ஒரு பிக் பாஸ் போட்டியிலும் இல்லாத அளவிற்கு, பெண் போட்டியாளர்களுக்கு மத்தியில் ஒரே ஒரு ஆண் போட்டியாளர் பாலாஜி இருக்கிறார் சென்ற வாரம் கமல்ஹாசன் வியந்தார்.   வாக்குகளின் அடிப்படையில் பாலாஜி வெளியேறியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
 Actor Daniel Balaji passes away

வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, பைரவா, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் டேனியல் பாலாஜி. இவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டேனியல் பாலாஜியின் மறைவு திரைத்துறை வட்டாரத்தில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். 

Next Story

பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்தக்கோரிய வழக்கு - தொகுப்பாளருக்கு நோட்டீஸ்

Published on 02/11/2022 | Edited on 02/11/2022

 

court send notice to nagarjuna for bigboss show

 

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நாகர்ஜுனா தமிழிலும் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் நடந்து வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி சமூக சீர்கேட்டுக்குக் காரணமாக உள்ளது எனக் கூறி நிகழ்ச்சியை நிறுத்தக்கோரி ஒரு பொதுநல வழக்கு ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

 

court send notice to nagarjuna for bigboss show

 

இந்நிலையில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இதனை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் நாகர்ஜுனாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளும் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை 14 நாட்களுக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.