காருண்யா பலகலைக்கழக ஆடிட்டோரியத்தின் மீது ஏறி
எலக்ட்ரீசியன் ஆசாத் தற்கொலை மிரட்டல்
உடலால் உழைக்கும் தொழிலாளர்களுக்கு அரசு ஒப்பந்தப்படி முறையான ஊதியம் மற்றும் பணிபாதுகாப்பு வழங்கக்கோரி காருண்யா பலகலைக்கழக ஆடிட்டோரியத்தின் மீது ஏறி எலக்ட்ரீசியன் ஆசாத் தற்கொலை மிரட்டல்
கோவை சிறுவாணி அருகே காருண்யா நிகர்நிலைப்பல்கலைககழகம் செயல்பட்டு வருகிறது. இதில் பொறியியல் மற்றும் மேலாண்மை பாடப்பிரிவுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிப்பதால் , அடிப்படை தொழிலாளர்கள் 300 பேர்பணிபுரிந்துவருகின்றனர்.இந்நிலையில் இன்று காருண்யா பல்கலைக்கழகத்தில் 7 ஆண்டுகளாக எலெக்ட்ரிசியனாக கேரளாவைச்சேர்ந்த ஆசாத் பணிபுரிந்து வருகிறார்.
அவர் விடுமுறை எடுக்காமல் வேலை செய்வதால் 15 நாட்கள் ஊருக்கு செல்ல வேண்டும் என பொறியாளரிடம் தெரிவுத்துள்ளார். 15 நாட்கள் விடுப்பு கொடுக்க முடியாத என அவர் கூறியதால் மனமுடைந்த ஆசாத் ஆடிட்டோரியம் மீது ஏறி தற்கொல்லை மிரட்டல் விடுத்தார்.காருண்யா பலகலைகழகத்தில் பணிபுரியும் உடல் உழைப்பு சார்ந்த ஒட்டுனர், துப்புரவு பணியாளர்க்ள், பம்ப் ஆப்ரேட்டர்கள் , எலக்ட்ரிசியன், வர்ணம் பூசுபவர்கள் ஆகிய துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு எட்டுமணி நேர வேலை மட்டுமே வழங்க வேண்டும் எனவும், அதிக நேரம் வேலை வாங்கினால் அதற்கான சமபளத்தை தனியாக தர வேண்டும் என்றார்.வாரம் தோறும் வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
வாரத்திற்கு ஒரு நாள் சமபளத்தோடு கூடிய விடுப்பு, தேசிய விடுமுறை நாட்களிலும் இதே போல வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி, தொழிலாளர் ஈட்டுறுதி மையம் போன்றவற்றிற்கு நிர்வாகத்தின் பங்கு மற்றும் தொழிலாளர்களின் பங்குகளை முறையாக செலுத்த வேண்டும். 24 வருடங்களுக்கு மேல் பணிபுரிகின்றவர்களுக்கு , பணி செய்த ஆண்டை கணக்கீட்டு ஆண்டுக்கு ஒரு தொகையை வழங்க வேண்டும். இரண்டு வருடங்களாக சமபள உயர்வு வழங்காமல் இருப்பதால் , இர்ண்டு வருடத்திற்கான ஊதிய உயர்வை வழங்க கோரிக்கை விடுத்தார்.
துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் , குழந்தைகளின் படிப்புக்கு உதவித்தொகை மற்றும் மருத்துவச்செலவு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து ஆசாத் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.இதனையடுத்து பல்கலைக்கழக நி்ர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி ஆசாத் சார்ந்திருக்கும் பரதீய பொது தொழிலாளர் சங்கத்தின் கோரிக்கைகளை பரிசிலிப்பதாக தெரிவித்ததையடுத்து அவர் கீழே இறங்கினார். அரை மணி நேரமாக தற்கொலை மிரட்டல் விடுத்தவருடன் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
- அருள்