பெண்ணை தாக்கமுயன்ற அய்யாக்கண்ணுவை கைது செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மகளிர் தினமான நேற்றைய தினத்தில் கோவிலில் வைத்து பெண்ணை தாக்கமுயன்ற அய்யாக்கண்ணுவை கைது செய்ய வேண்டும். கோவிலுக்குள் சென்று நேட்டீஸ் கொடுத்திருக்கிறார். இவர் மசூதி, சர்ச்க்கு எல்லாம் போய் நோட்டீஸ் கொடுக்க முடியுமா? இந்துக்களின் வழிப்பாட்டு தளத்தை எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று செய்கிறார்.
கோவிலுக்குள் சென்றால் தேவாரம், திருவாசகம் கொடுக்கட்டும். அங்கு சென்று இதுபோல் நோட்டீஸ் கொடுப்பது மட்டுமல்லாமல், நெல்லையம்மாள் என்கிற பாஜக மகளிர் நிர்வாகியை கெட்ட வார்த்தை பேசி அடிக்கப் போவது போன்ற வீடியோ நம் எல்லாருக்கும் வந்துள்ளது.
அவர் தாக்க போறார். கெட்டவார்த்தை பேசுகிறார். அந்த மாதிரியான மிக கொச்சையான நபரை இதுவரை திருச்செந்தூர் போலீசார் கைது செய்யாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது என கூறினார்.
மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக 4 மாநில அதிகாரிகள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்படி அமைப்பதற்கு 4 மாநில பங்கேற்றலும் இருக்கனுமா? வேண்டாமா? அதற்கான முதல் நடவடிக்கையே. இன்றைய கூட்டத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.