அயனாவரம் ரவுடி கொலையில் நண்பர்கள் கைது
அயனாவரத்தை அடுத்த ஐ.சி.எப். காலனி 13-வது தெருவை சேர்ந்தவர் சங்கர். ரெயில்வே ஊழியர். இவரது மகன் வினோத்குமார் (வயது 26), ரவுடி. இவன் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. நேற்று காலை ஐ.சி.எப். காலனி, கம்பர் அரங்கத்தின் பின்பகுதியில் உள்ள முட் புதரில் வினோத்குமார் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அயனாவரம் உதவி கமிஷனர் சந்திரதாசன் மேற்பார்வையில் ஐ.சி.எப். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வினோத் குமாரை அவரது நண்பர்களான அயனாவரம் தாகூர் நகரை சேர்ந்த சந்தோஷ், ராஜ், மதன், டேவிட், அக்ஷய்குமார் ஆகியோர் கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து சந்தோஷ், அக்ஷய்குமார் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
போலீசில், அக்ஷய்குமார் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:
எனது தங்கையை வினோத்குமார் காதலிப்பதாக கூறிவந்தான். இதனை கண்டித்தும் அவன் கேட்க வில்லை. நேற்று முன்தினம் நண்பர்கள் அனைவரும கம்பர் அரங்கத்தின் பின்புறம் அமர்ந்து மது அருந்தினோம். அப்போது தங்கை குறித்து வினோத்குமார் மீண்டும் கூறினான். இதனை கண்டித்த என்னை கத்தியை காட்டி மிரட்டினான். இதனால் ஆத்திரம் அடைந்த நான், நண்பர்களுடன் சேர்ந்து வினோத்குமாரிடம் இருந்த கத்தியை பிடுங்கி அவனை கொன்றேன்’. இவ்வாறு கூறினார்.