Skip to main content

அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி வழக்கில் தீர்ப்பு முழு விபரம்!

Published on 03/02/2020 | Edited on 03/02/2020

அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 15 பேரில் 5 பேருக்கு ஆயுள் தண்டனையும் மற்ற குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள்  சிறைத்தண்டனையும்,  ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து சென்னை மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

 

ayanavaram incident - Court judgement

 



சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், 12 வயது சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தக் குடியிருப்பில்    பணிபுரிந்த வாட்ச்மேன், பிளம்பர், லிப்ட் ஆப்பரேட்டர், தோட்டக்காரர், எலக்ட்ரீசியன், வீட்டு வேலை செய்பவர் என ( ரவிகுமார், சுரேஷ், ராஜசேகர், எரால்பிராஸ், அபிஷேக், சுகுமாரன், முருகேசன், பரமசிவம், ஜெய்கணேஷ், பாபு,  பழனி, தீனதயாளன், ராஜா, சூர்யா, குணசேகரன், ஜெயராமன், உமாபதி ) 17 பேரை போக்சோ சட்டத்தின் கீழ்  காவல்துறையினர் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்தனர்.

இவர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.  17 பேர் மீதான குண்டர் சட்டத்தை 2019-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி உயர்நீதிமன்றம் ரத்து செய்த போதிலும்,  17 பேருக்கும் ஜாமின் வழங்கப்படவில்லை.

 



இந்நிலையில் இந்த வழக்கில் காவல்துறை 300 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது, அரசுத் தரப்பில் 36 சாட்சிகளும், குற்றவாளிகள் தரப்பில் 7 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு,   அதுதொடர்பான 120 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு, சென்னை மாவட்ட சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணைகள் அனைத்தும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நிறைவடைந்த நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி இந்த வழக்கில்  தோட்டக்காரர் குணசேகரன் என்பவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டார். மற்ற 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. அவர்களுக்கான தண்டனை விவரங்களை இன்று நீதிபதி மஞ்சுளா அறிவித்தார். அதன்படி  லிப்ட் ஆப்ரேட்டர் ரவிகுமார் உள்ளிட்ட 4 பேருக்கு  வாழ் நாள் சிறைத்தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும்,  மேலும் 9 பேருக்கு 5 ஆண்டுகள் தண்டனையும்,  ஒருவருக்கு 7 ஆண்டுகள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.  இந்த வழக்கில்  குற்றவாளிகள் அனைவருக்கும் எந்த அபராதத் தொகையும் விதிக்கவில்லை. 

குற்றவாளிகள்  17 பேருக்கான  தண்டனை விவரம் பின்வருமாறு -


ஆயுள் தண்டனை பெற்றவர்கள்:

ரவிகுமார்( 56) லிப்ட் ஆபரேட்டர் - வாழ் நாள் சிறை  தண்டனை

சுரேஷ் (32) பிளம்பர் - வாழ் நாள் சிறை தண்டனை

அபிஷேக் ( 28)செக்யூரிட்டி - வாழ் நாள் சிறை தண்டனை

பழனி(40)செக்யூரிட்டி வாழ்நாள் சிறை தண்டனை

ராஜசேகர்(48) வீட்டு வேலை செய்தவர் - ஆயுள் தண்டனை


சிறைதண்டனை பெற்றவர்கள்:


எரால்பிராஸ்(58)செக்யூரிட்டி - 7 ஆண்டுகள் சிறை தண்டனை

சுகுமாரன் (60) செக்யூரிட்டி- 5 ஆண்டுகள் சிறை தண்டனை

முருகேசன்(54)செக்யூரிட்டி - 5 ஆண்டுகள் சிறை

பரமசிவம் (60)லிப்ட் ஆபரேட்டர்-5 சிறை தண்டனை

ஜெய்கணேஷ் (23)பிளம்பர்- 5 ஆண்டுகள் சிறை தண்டனை

தீனதயாளன்(50)லிப்ட் ஆப்ரேட்டர் - 5 ஆண்டுகள் சிறை

ராஜா (32)பிளம்பர் - 5 ஆண்டுகள் சிறை

சூர்யா(23)பிளம்பர்- 5 ஆண்டு சிறை

ஜெயராமன்(26)வீட்டு வேலை செய்தவர் - 5 ஆண்டு சிறை

உமாபதி(42)எலெக்ட்ரீசியன்/ லிப்ட் ஆபரேட்டர் - 5 ஆண்டு சிறை

மேற்கண்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு, கடந்த 20 மாதங்களாக விசாரணை நடத்தப்பட்டு, இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. 

 
 

சார்ந்த செய்திகள்