Skip to main content

நெல்லை கண்ணன், சுகி சிவம் ஆகியோருக்கு விருது

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

Award for Nellai Kannan and Suki Sivam!

 

2021-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

 

தமிழ் இலக்கியங்களில் மிகப் பெரிய புலமை பெற்றவரும், தமிழ்க்கடல் என அழைக்கப்படுவருமான நெல்லை கண்ணனுக்கு இளங்கோவடிகள் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சொல் வேந்தர் சுகி.சிவத்திற்கு மறைமலையடிகள் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

மேலும், பாரதி கிருஷ்ணகுமார்- மகாகவி பாரதியார் விருது, புலவர் செந்தலை கவுதமன்- பாவேந்தர் பாரதிதாசன் விருது, சூர்யா சேவியர்- சொல்லின் செல்வர் விருது, கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம்- சிங்காரவேலர் விருது, நாஞ்சில் சம்பத்- பேரறிஞர் அண்ணா விருது, முனைவர் சஞ்சீவிராயர்- அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, உயிர்மை திங்களிதழுக்கு- சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது, முனைவர் அரசேந்திரன்- தேவநேயப்பாவாணர் விருது, நா.மம்மது- உமறுப்புலவர் விருது, முனைவர் ராசேந்திரன்- கி.ஆ.பெ.விருது, பாரதி பாஸ்கர்- கம்பர் விருது, ஏ.எஸ்.பன்னீர் செல்வம்- ஜி.யு.போப் விருது, சுகி.சிவம்- மறைமலையடிகள் விருது, ஞான.அலாய்சியஸ்- அயோத்திதாசப் பண்டிதர் விருது, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்- தமிழ்த்தாய் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இவ்வாண்டுமுதல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகை ரூபாய் 1 லட்சத்தில் இருந்து ரூபாய் 2 லட்சமாக உயர்த்தியும், ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்