Skip to main content

ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்... பேருந்தில் பிடித்த பாடலை போடாததால் ஆத்திரம்!

Published on 10/08/2022 | Edited on 10/08/2022

 

Attack on driver, conductor... Rage for not playing favorite song!

 

தனியார் பேருந்தில் பிடித்த பாடலை போடாததால் பேருந்தின் நடத்துநரையும், ஓட்டுநரையும் பயணி ஒருவர் தாக்கிய சம்பவம் நாகையில் நிகழ்ந்துள்ளது.

 

நாகை மாவட்டம் ஆயமலை கிராமத்தில் சென்றுகொண்டிருந்த தனியார் மினி பேருந்து ஒன்றில் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. அப்பொழுது இந்த பாடல் வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்த பயணி ஒருவர், மற்றொரு பாடலை வைக்க சொல்லியுள்ளார். ஆனால் பேருந்து ஓட்டுநர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அடுத்த பேருந்து நிறுத்தத்திலேயே அந்த பயணி இறக்கிவிடப்பட்டுள்ளார். பின்னர் அந்த பயணி அவரது நண்பர்களுடன் அதே நிறுத்தத்தில் காத்திருந்த நிலையில் மீண்டும் அதே பேருந்து மீண்டும் அவ்வழியாக வந்த பொழுது பேருந்தில் ஏறிய அந்த பயணி தனது நண்பர்களுடன் சேர்ந்து பேருந்தின் ஓட்டுநர், நடத்துநரை வனப்பகுதிக்கு இழுத்துச் சென்று சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தற்பொழுது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்