ஆர்.கே.நகர் மக்களிடம் 2, 3-ந்தேதிகளில் நன்றி தெரிவிக்கிறார் டிடிவி தினகரன்!
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டி.டி.வி. தினகரன் வருகிற 29-ந் தேதி பதவி பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியான சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு கடந்த வியாழக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஆளும் அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ், சுயேச்சையாக டி.டி.வி.தினகரன், பாரதீய ஜனதா சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் ஆகியோர் உள்பட 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பல்வேறு வேட்பாளர்கள் களத்தில் இருந்த போதிலும் மதுசூதனன், மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் இடையேதான் கடும் போட்டி நிலவியது.
வாக்கு எண்ணிக்கை முடிவில் டிடிவி தினகரன் 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை விட அவர் 40 ஆயிரத்து 707 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார். 48 ஆயிரத்து 306 ஓட்டுகள் பெற்ற மதுசூதனனுக்கு 2-வது இடம் கிடைத்தது. டி.டி.வி.தினகரனை எதிர்த்து போட்டியிட்டவர்களில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை தவிர மருதுகணேஷ் உட்பட 57 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.வாக வரும் 29–ந்தேதி சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அறையில் பதவி ஏற்கிறார்.
இதைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களை அடுத்த வாரம் சந்தித்து நன்றி தெரிவிக்க முடிவு செய்துள்ளார். அனேகமாக 2 அல்லது 3-ந்தேதி டி.டி.வி. தினகரன் ஆர்.கே.நகர் செல்வார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். மேலும் ஆர்.கே.நகர் தொகுதியில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவரது சுற்றுப்பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என தினகரன் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.