Skip to main content

ஆர்.கே.நகரில் 20,000 பேர் எங்கள் கட்சி உறுப்பினர்கள் - தொப்பி சின்ன வேட்பாளர் எம்.ரமேஷ் அதிரடி!

Published on 10/12/2017 | Edited on 10/12/2017
ஆர்.கே.நகரில் 20,000 பேர் எங்கள் கட்சி உறுப்பினர்கள் - தொப்பி சின்ன வேட்பாளர் எம்.ரமேஷ் அதிரடி! 

தமிழக அளவில் முன்மாதிரி தொகுதியாக ஆர்.கே.நகரை மாற்றிக் காண்பிப்பேன் என தொப்பி சின்ன வேட்பாளர் நமது கொங்கு முன்னேற்ற கழக வேட்பாளர் எம்.ரமேஷ் வாக்குறுதி அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

ஆர்.கே.நகர் தொகுதியில் தொப்பி சின்னத்தினை வெற்றிச் சின்னமாக மாற்ற மிகக்கடுமையாக உழைப்போம். வரும் 13-ம் தேதி புதன்கிழமை தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். ஆர்.கே.நகர் தொகுதி தமிழக அளவில் முன்மாதிரி மற்றும் முதன்மை தொகுதியாக மாற்ற பாடுபடுவேன்.



தொப்பி சின்னம் தேர்வு குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், ஏற்கனவே, கொங்கு மண்டலத்தில் நாங்கள் எப்போதும் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டோம். தற்போது பதிவுபெற்ற கட்சியான இரண்டு கட்சிகள் தொப்பி சின்னத்தை கேட்டபோது, குலுக்கல் முறையில் எங்களுக்கு கிடைத்தது. 

கொங்கு தமிழ் தேசிய கட்சி என்று ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் பெஸ்ட் ராமசாமி, கொங்கு ஈஸ்வரன் என்ற வரிசையில், நமது கொங்கு முன்னேற்றக்கழகம் என்ற பெயரில் தற்போது நிற்கின்றது. எனக்கு எல்லோருமே போட்டிதான். என்னையும், எனது கட்சியையும் திமுகவோ, அதிமுகவோ, டிடிவி தினகரனோ சந்திக்கவில்லை.

இந்த தொகுதியில் எங்கள் கட்சி உறுப்பினர்கள் 20 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அதனால் 5,000 முதல் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம். இடைத்தேர்தல் போல் இல்லாமல் அதிகாரிகள் நடுநிலையோடு செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார். ஆரம்பத்தில் தே.மு.தி.க.வில் இருந்து இந்த கட்சிக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

- ஜெ.டி.ஆர்

சார்ந்த செய்திகள்