Skip to main content

நடிகர் சூர்யா, ரஜினிகாந்த் போன்றவர்கள் புதிய கல்விக்கொள்கையை அறியாதவர்கள்; அர்ஜீன் சம்பத் பேட்டி!

Published on 23/07/2019 | Edited on 23/07/2019

"நடிகர் சூர்யா, ரஜினிகாந்த் போன்றவர்கள் புதிய கல்விக் கொள்கையை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் திமுகவின் ஊதுகுழலாக செயல்படுகின்றனர்,"  என்று கூறியுள்ளார் இந்து மக்கள்
கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத். 

கடந்த 20ஆம் தேதிஅடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதில் இந்து மக்கள் கட்சியின் நாகை மாவட்ட பொறுப்பாளரான பார்த்திபனுக்கு எலும்பு முறிந்தநிலையில் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தவரை இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

arjun sampath interview


மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்தவர் செய்தியாளர்களை சந்தித்துப்பேசினார், "விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் தீவிரவாதத்திற்கு ஆதரவாக செயல்படுகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தை ஒரு ஐ.எஸ்.ஐ கூடாரமாக மாற்றுவதற்கு பெரிய அளவிலான முயற்சி நடைபெற்று வருகிறது. நாகை எம்.எல்.ஏ.தமிமுன் அன்சாரி உட்பட பலரும் அதற்கு ஆதரவாக இருக்கின்றனர்

புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா, ரஜினிகாந்த், உள்ளிட்ட நடிகர்கள் சரியாகப் படித்துப் பார்க்கவில்லை. அதை சரியாக அறிந்து கொள்ளவில்லை. புதிய கல்வி கொள்கையின் நோக்கம் என்பது நவோதயா கல்வி போல தரமான கல்வி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும் என்பதே. வேண்டுமென்றே திராவிட முன்னேற்றக் கழகமும், சிறிய சிறிய நக்சல் அமைப்புகளும்,  இந்த விஷயத்தில் அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். " என தொிவி்த்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்