மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் வரைவு திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் விவசாயிகள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் ஒப்புதல் உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணைத்திற்கு எதிரான செயலாகும் என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிமேற்கொண்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அணை கட்டுவதற்கான 5 ஆயிரம் கோடிக்கான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.இதற்கு தமிழக விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தொிவித்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக திருவாரூர் பேருந்து நிலையத்தின் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரிவான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அணைகட்ட ஒ ப்புதல் அளித்த மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்தின்நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் இதனை பயன்படுத்தி மத்திய அரசு இயற்கை வளத்தினை சுரண்ட முயற்சிகிறது.
மத்திய தமிழக விவசாயிகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுவதற்கு இதுவும் ஒரு எடுத்து காட்டாகும். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு அதன் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது சட்டத்திற்குவிரோதமானது. தமிழக விவசாயிகள் ஒரு போதும் அணை கட்ட அனுமதிக்க மாட்டார்கள் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொிவித்தனர்.