விவசாயிகளை பாதுகாக்க அண்ணா ஹசாரே போராட்டம்!
விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி வரும் மார்ச் 23ல் டெல்லியில் போராட்டம் நடத்த போவதாக அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார்.
மதுரையில் நாளை வைகை ஆறு பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மீட்பு இயக்கம் சார்பாக கருத்தரங்கம் நடைபெற உள்ளது இதில் கலந்து கொள்ளவதற்காக அண்ணாஹசாரே இன்று மதுரை வந்தார். இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர் சந்திப்பில்,
மதுரையில் வைகை ஆறு அழிந்து வருவதாக என்னிடம் சொன்னார்கள் அதை தடுக்கவும் அதை மீட்க போராடுவதற்காகவும் மதுரை வந்துள்ளேன். இதேபோல் மஹாராஸ்டராவில் ஆறுகள் அழிந்து வந்தன அதில் இருந்து மீட்க பல போராட்டம் செய்துள்ளோம்.
நமது நாட்டில் குடிநீர் கிடைக்காமல் பிரச்சனைகள் இருக்கிறது காரணம் நதி நீர் பாதுகாக்கப்படவில்லை அதன் காரணமாக தண்ணீர் பிரச்சினை இருந்து வருகிறது. அரசு தொழிற்சாலை அமைப்பதில் தான் முயற்சி செய்து வருகிறது ஆனால் விவசாயிகள் பற்றியும் விவசாயிகள் பற்றிய கவலை அரசுகளுக்கு இல்லை.
கோக் இல்லாமல் உயிர் வாழ முடியும் ஆனால் உணவு இல்லாமல், வாழ முடியாது. இதை பற்றியெல்லாம் கவலை இல்லாத அரசாக மத்திய மாநில அரசு இருந்து வருகிறது. எனவே நாட்டின் அனைத்து விவசாயிகளுடன் ஒன்றிணைத்து வரும் மார்ச் 23ம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இதில் விவசாயிகளின் பிரச்சினை பற்றியும் நாட்டின் நதிகள் பாதுகாப்பு, லோக்பால் சட்டத்தை வலுபெற வலியுறுத்தியும் டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டு இதற்கான கடிதம் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்களே இடம் தேர்வு செய்து கொடுக்கட்டும்.
லோக்பால் சட்டத்தை கொண்டுவந்த மத்திய அரசு அதை வலுவிழக்கும் விதமாகவே செயல்பட்டு வருகிறது. வரும் திங்கள்கிழமை காலையில் மதுரை மக்களை ஒன்று திரட்டி வைகை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வைகை ஆற்று பகுதியில் நடைப்பயணம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.