Skip to main content

இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து கண்டுபிடிக்கும் முகாம் திறப்பு!

Published on 06/12/2017 | Edited on 06/12/2017
இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து 
கண்டுபிடிக்கும் முகாம் திறப்பு!



தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஆ.சுப்பிரமணி ஆலோசனைப்படி செவ்வாய் கிழமை (05.12.2017) காலை ஐ.எஸ்.ஓ. உலகத் தரச்சான்றிதழ் பெற்ற மேம்படுத்தப்பட்ட செருவாவிடுதி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படக்கூடிய இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு கண்டுபிடிக்கும் முகாம் நடைபெற்றது. 

முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தரராஜன் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்க மாநில துணைத்தலைவரும், பேராவூரணி டாக்டர் ஜே.சி. குமரப்பா பள்ளி தாளாளருமான டாக்டர் ஜி.ஆர். ஶ்ரீதர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ரெங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இம்முகாமில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் அதிகம் கவனிக்கப்பட வேண்டிய கர்ப்பிணி தாய்மார்கள் (High Risk Mother), 2, 3 குழந்தைகளுடன் குடும்ப கட்டுப்பாடு முறையை கடைபிடிக்காத தாய்மார்கள் (Hiher order Birth) ஆகியோர்களுக்கு ஆலோசனை சிகிச்சை  வழங்கப்பட்டது.

முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான இயற்கை உணவு வழங்கும் வகையில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறித்தோட்டத்தை  வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, மருத்துவ கழிவுக்கான (BIO MEDICAL WASTE) அறையை  மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ரெங்கநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

சிறப்பு அழைப்பாளர் ஜே.சி. குமரப்பா பள்ளி தாளாளரும், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில துணைத்தலைவருமான டாக்டர் ஜி.ஆர்.ஶ்ரீதர் அவர்கள் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து உணவினை வழங்கி விழாவை தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ரகுராமன், பேராவூரணி வட்டாட்சியர் பாஸ்கரன், தொடக்க கல்வி அலுவலர்கள் திருவோணம் நடராஜன், பேராவூரணி தமிழ்செல்வி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அங்கயற்கண்ணி, குமரப்பா கல்வி அறக்கட்டளை அறங்காவலர் பொறி அஸ்வின் ஶ்ரீதர், டாக்டர்கள் ரஞ்சித், சிவரஞ்சனி், தீபா, கிருத்திகா, கோகிலா, வெங்கடேஷ், ஹம்சா, கலைச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர் முத்துக்கிருஷ்ணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகர், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

-இரா. பகத்சிங்

சார்ந்த செய்திகள்