![ammk ttv dhinakaran](http://image.nakkheeran.in/cdn/farfuture/OUPY8wp7-kB3cQqZF_pmbjsvtIrv_V9xtv2HC-1TCxo/1607339361/sites/default/files/inline-images/4e64674_0.jpg)
அண்மையில் செய்தியாளர் சந்திப்பில், தி.மு.க. எம்.பி ஆ.ராசா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி விமர்சித்திருந்தார். அதேபோல் யார் ஊழல் கட்சி என விவாதிக்கத் தயாரா என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விட்டிருந்தார் ஆ.ராசா.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தொடர்ந்து விமர்சிப்பதாக, அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "ஜெயலலிதா பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கும், ஆ.ராசாவுக்கும் என்ன தகுதி இருக்கிறது? இருவரும் நாகரிகத்துடன் பேசவேண்டும். நாகரிக அரசியலுக்கும், திமுகவுக்கும் எந்தக் காலத்திலும் சம்பந்தம் இருந்ததில்லை. சர்க்காரியாவில் இருந்து தப்பிப்பதற்காக கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்தது யார்? தமிழகத்தின் நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் பல ஊழல்களின் ஊற்றுக்கண்தான் தி.மு.க" எனக் கூறியுள்ளார்.