Published on 13/06/2021 | Edited on 13/06/2021
அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "காவிரி டெல்டாவின் ஒரு பகுதியான புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இப்பிரச்சனையில் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறி மத்திய அரசு நடந்து கொள்வது சரியானது அல்ல.
தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியில் நெடுவாசல் வருவதால், தமது ஹைட்ரோ கார்பன் ஏல அறிவிப்பினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.