தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் இறுதி கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு ஆகிய விஷயங்களில் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் அமித்ஷா, விழுப்புரம் மற்றும் காரைக்காலில் தேர்தல் பரப்புரை மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை ஆகியவற்றை மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக தமிழகம் வந்துள்ள அமித்ஷா சென்னையில் இருந்து காரைக்கால் புறப்பட இருக்கிறார்.
இந்நிலையில் சென்னையில் தமிழக பாஜக பொறுப்பாளர்களுடன் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரை பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர்கள் குழு சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா பாஜக மேலிட பொறுப்பாளர்களை சந்தித்து பேசியுள்ளார். மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் முருகன் உள்ளிட்டோர் அமித்ஷாவை சந்தித்துள்ளனர்.