முந்திச்செல்வதை விட முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை: நடிகர் கமலின் அடுத்த ட்விட்..!
நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் தொடர்ந்து ஆட்சிக்கு எதிரான கருத்துகளையும், விமர்சனங்களையும் பதிவிட்டு வருகிறார். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதற்கு அமைச்சர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஊழல் ஆதாரங்களை திரட்டி அவர்களின் மின் அஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வையுங்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து நேற்று முன்தினம் பெரம்பலூரில் சத்துணவு முட்டையில் ஊழல் நடந்து இருப்பதை தனது ரசிகர்கள் கண்டுபிடித்துவிட்டதாக தகவல் வெளியிட்டார்.
இதையடுத்து நேற்று அவர் டிவிட்டர் பதிவில் கூறியதாவது,
“டாக்டர் நீர் சொன்னீர். வழிமொழிகிறேன். முந்திச்செல்வதை விட முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை. பின்பற்றுவோர் தொண்டரல்லர் மக்கள், குடியரசு புரிந்ததா?” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.