கள்ளக்காதல் விவகாரம்: பூ வியாபாரி கொலை
செய்யப்பட்டு வீட்டில் சடலம் புதைப்பு!
ஆவடி காமராஜர் நகர், ராமலிங்கம் 3வது தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (38) திருமணமாகாதவர். ஆவடி ரெயில் நிலையம் அருகே பூ மாலை கடையில் பூ கட்டும் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2-ந் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற சுந்தரம் அதன் பின்னர் வீட்டுக்கு வரவில்லை. இதுகுறித்து சுந்தரத்தின் அம்மா யசோதா (60) ஆவடி போலீசில் புகார் கொடுத்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் ஆவடி கவுரிபேட்டை கள்ளுக்கடை தெருவை சேர்ந்த அமுதா (34) என்பவரது வீட்டில் சுந்தரம் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஆவடி போலீசார் நேற்று அமுதா வீட்டுக்கு சென்று விசாரித்தனர். விசாரணையில் சுந்தரத்துக்கும் கவுரிபேட்டையை சேர்ந்த ராஜேஸ்வரி (36) பூ வியாபாரம் செய்கிறார். என்பவருக்குமிடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. பின்னர் ராஜேஸ்வரியின் தம்பி சரவணன் (26) இறந்து விட்டதால் அவரது மனைவியான அமுதாவுடன் சுந்தரத்துக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ராஜேஸ்வரியை விட்டு விட்டு அமுதாவுடன் சுந்தரம் இருந்து வந்தார். ஆனால் அமுதா சுந்தரத்தின் நடவடிக்கை பிடிக்காததால் அவரை விட்டு விட்டு திவான் (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் பழகி வந்தார் இதனால் சுந்தரத்துக்கும் அமுதாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி சம்பவத்தன்று சுந்தரத்தை வா அமுதா வீட்டுக்கு போகலாம் என்று அழைத்து சென்றுள்ளார். அங்கு இருந்த திவான், அவரது நண்பர் கோபி இருவரும் ஆட்டோ டிரைவர்கள். ஆகியோர் சேர்ந்து சுந்தரத்தை கொலை செய்து வீட்டுக்குள் புதைத்து விட்டு சிமெண்ட் போட்டு பூசியதாக திவானின் அம்மா ரகிமாகனி (48) போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கர்ணன் கொலை வழக்கு பதிவு செய்து ராஜேஸ்வரி, அமுதா, ரகிமாகனி ஆகிய மூவரையும் பிடித்து விசாரித்து வருகிறார். மேலும் தலைமறைவாக உள்ள திவான், கோபி ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திவானை பிடித்த பின்னர்தான் வீட்டுக்குள் எந்த இடத்தில் சுந்தரம் புதைக்கப்பட்டுள்ளார் என்ற விவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- செண்பகபாண்டியன்
- செண்பகபாண்டியன்