நேற்று அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு திமுக, அதிமுக கட்சி நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில்,'' நடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஒன்றாக வரும் என்கிறார் டாடி மோடி. மோடி சொல்வதுபோல் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் ஒன்றாக வந்தாலும் அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்காங்க. எங்க ஆட்சியில ஒரு கட்டிங் அடிச்சா கிச்சுனு ஏறும். இப்போ மூணு ரவுண்டு அடிச்சு பாக்குறேன் ஏற மாட்டேங்குது. சரக்கே செந்தில்பாலாஜி ஸ்டாக்குயா. கவர்மெண்ட் சரக்கு கிடையாது, ஒரிஜினல் சரக்கு கிடையாது. செந்தில்பாலாஜி கரூர் ஆலையில தயாரிச்ச சரக்க குடிச்சா எங்க ஏறும்.பாட்டில் மட்டும் அழகா இருக்கு. இந்த ஆட்சியில நிம்மதியா குடிச்சிட்டு போய் படுப்போம்னா அதுக்கும் வழியில்ல'' என்றார்.