Published on 04/11/2020 | Edited on 04/11/2020

தமிழகத்தில் வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னெடுப்புகளை ஒவ்வொரு கட்சிகளும் மேற்கொண்டு வருகிறது. தற்போதே தொகுதிப் பங்கீடு, தேர்தல் கூட்டணி எனத் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில், 'அதிமுகவில் அணியுமில்லை பிணியுமில்லை' எனக் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில்,
அ.தி.மு.க அரசைப் பொறுத்த வரையும், எங்களைப் பொறுத்தவரையும் அணியும் கிடையாது பிணியும் கிடையாது. எல்லாருடைய கருத்தும் ஒன்று தான், அது அம்மாவுடைய லட்சியம். மீண்டும் மூன்றாவது முறையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்பதற்கான பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். திட்டங்களைக் குறைசொல்ல முடியாத எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.கவை குறை சொல்லி வருகிறார் எனவும் கூறினார்.